ஹரி இயக்கத்தில் தனுஷ்!

பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா வாஹினி சமீப காலத்தில் தயாரித்த வெற்றிப் படங்கள், ஹரி இயக்கிய தாமிரபரணி மற்றும் தனுஷ் நடித்த படிக்காதவன்.
இப்போது இந்த இரு படங்களில் பணியாற்றிய இயக்குநர் மற்றும் ஹீரோவை வைத்து புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கிறது விஜயா நிறுவனம்.
பி பாரதி ரெட்டி மற்றும் பி வெங்கட்ராமரெட்டி தயாரிக்கும் இந்தப் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இப்போது சிங்கம் படத்தை இயக்கிவரும் ஹரி, அந்தப் படம் முடிந்ததும் இந்த புதிய பட இயக்கத்தில் இறங்குகிறார்.
"தனுஷ் - ஹரி முதல் முறையாக விஜயா நிறுவனத்துக்காக இணைகிறார்கள். இந்தக் கூட்டணி நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில், பெரிய பட்ஜெட் படமாகவே உருவாக்குகிறோம்" என்கிறார் வெங்கட்ராமரெட்டி.
வரும் 2010 ஜூலையில் படப்பிடிப்பைத் துவங்கி முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள் என்கிறார் படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில்.


Click it and Unblock the Notifications











