சல்மான் கானுக்கு நெஞ்சுவலியா? குடும்பத்தார் மறுப்பு

By Siva

Salman Khan
பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் நெஞ்சு வலி காரணாக மும்பை சைபீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதை அவரது குடும்பத்தார் மறுத்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் (45) பல இளைஞர்களை கவர்ந்துள்ளார். இந்த வயதிலும் கட்டுமஸ்தான உடல் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறஇயதால், மும்பையில் உள்ள சைபீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் செய்திகள் வந்தன.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆன்ஜியோகிராம் சோதனை செய்ததாகவும், பின்னர் ஆன்ஜியோகிராபி சிகிச்சை அளித்ததாகவும், தற்போது சல்மான் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சல்மான் கான் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஓவராக உடற்பயிற்சி செய்வதால் தான் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. பகல் வேளையில் படபிடிப்பு இருந்தால் இரவு 2 மணி ஆனாலும் உடற் பயிற்சி செய்யாமல் தூங்கமாட்டாராம்.

உடற்பயிற்சி்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் சல்மான். ஆனால் சல்மான் நலமாக இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி என்று சல்மானின் தங்கையின் கணவர் அதுல் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு சல்லு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X