ட்ராபிக் ரீமேக்கில் கமல்?

By Shankar

இந்த ஆண்டு மலையாளத்தில் பெரிய வெற்றிப் படமாக அமைந்த 'ட்ராபிக்'கின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமல்ஹாஸன் ஆர்வம் காட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜேஷ் பிள்ளை இயக்கிய மலையாளப் படம் ட்ராபிக். சீனிவாசன், ரகுமான் உள்ளிட்டோர் நடித்து, பெரும் வெற்றி பெற்றது இந்தப் படம். விமர்சகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது.

இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்தார் கமல்ஹாஸன். படம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், இந்தப் படம் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே ட்ராபிக் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் தீவிரமாக இருந்த ராஜேஷ் பிள்ளை, அதில் நடிக்க கமலுக்கு சம்மதமா என்று கேட்டார். காரணம் இது 3 ஹீரோக்கள் கதை. ஆனால் கமல், உடனடியாக ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

செல்வராகவனுடன் இணைந்து அவர் உருவாக்கும் விஸ்வரூபம் படம் விசா பிரச்சினையால் தின தினங்கள் தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளதால், அதற்குள் இந்த ட்ராபிக் ரீமேக்கில் நடித்துவிட விருப்பம் தெரிவித்துள்ளாராம் கமல். இந்தப் படத்தில் முன்னணி நடிகர் வேடத்திலேயே அவர் வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X