கார்த்தியின் 'நான் மகான் அல்ல'!

By Staff

Karthi
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மற்றுமொரு படத் தலைப்பை புதுப்படத்துக்குச் சூட்டியுள்ளனர். ஆனால் இந்த முறை அந்த வேலையைச் செய்திருப்பவர் தனுஷ் அல்ல... பருத்திவீரன் கார்த்தி.

கார்த்தியை வைத்து அவரது குடும்பப் பட நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் புதிய படத்துக்கு நான் மகான் அல்ல என்ற தலைப்பைச் சூட்டியுள்ளனர்.

எண்பதுகளில் ரஜினி-ராதா நடித்து, எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்று 'நான் மகான் அல்ல'. பாலச்சந்தர் தயாரிப்பு இது.

இந்தப் படத்தை இயக்குபவர் வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்தை இயக்கிய சுசீந்திரன்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

"இந்தப் படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் கதை. கார்த்திக்குப் பொருத்தமான காட்சியமைப்புகள், நகைச்சுவை, ரொமான்ஸ் என விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது..." என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

இந்தத் தலைப்பைப் பயன்படுத்துவதற்கான முறையான அனுமதி எதையும் இவர்கள் இதுவரை பாலச்சந்தரிடமிருந்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X