மர்மயோகி கைவிடப்படவில்லை - கமல் பி.ஆர்.ஓ

கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் பிரமாண்டப் படைப்பாக உருவாகவிருக்கிறது மர்மயோகி. இப்படத்தில் திரிஷா, ஷ்ரியா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.
இந்த நிலையி்ல நிதிப் பிரச்சினை காரணமாக படத்தைத் தயாரிப்பதாக கூறப்பட்ட பிரமீட் சாய்மீரா நிறுவனம் விலகி விட்டதாகவும், இதனால் படம் கைவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை கமல்ஹாசன் இயக்கி நடிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மர்மயோகி கைவிடப்படவில்லை என்று கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ. நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் மர்மயோகி தாமதப்பட்டுள்ளது. மற்றபடி இது கைவிடப்படவும் இல்லை. ரத்து செய்யப்படவும் இல்லை.
கமல்ஹாசன் அடுத்து தலைவன் இருக்கின்றான் (தலைவன் இருக்கிறான் அல்ல) என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும். இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











