பேரரசுவின் ''ஆக்ஷன் ஜோதி'

ஊர்ப் பெயர்களை டைட்டிலாக வைத்து கலக்கலாக படம் கொடுக்கும் பேரரசு லேட்டஸ்டாக கொடுத்த ஆக்ஷன் அதிரடிதான் பழனி. இப்படத்திற்கு கமர்ஷியல் பஞ்சாமிர்தம் என பன்ச் லைன் வைத்திருந்தார் பேரரசு.
படத்திலும் அடுக்கடுக்காக டி.ஆர். பாணி பன்ச் டயலாக்குகளை வளைத்து வளைத்து அத்தனை பேரையும் பேச விட்டு அதகளம் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜூனை வைத்து திருவண்ணாமலை என்கிற அதிரடிப் படத்திற்கு தயாராகி விட்டார் பேரரசு. இப்படத்திற்கு ஆக்ஷன் ஜோதி என பன்ச் லைன் வைத்துள்ளார்.
அர்ஜூன் இப்படத்தில் கேபிள் டிவி ஆபரேட்டரா கவருகிறாராம். அர்ஜூன் நாயகன் என்பதால் டபுள் ஸ்டிராங்காக ஆக்ஷன் காட்சிகள ைவத்துள்ளாராம் பேரரசு.
கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் நேற்று தொடங்கியுள்ளது. அடுத்து திருவண்ணாமலைக்கு இடம் பெயருகின்றனராம்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் உருவாகும் இப்படம் ஆக்ஷனில் அதிரடி சரவெடியாக இருக்கும் என்கிறார் பேரரசு.


Click it and Unblock the Notifications











