ரோபோவுக்கு முன் ரஜினி புது படம்?

By Staff

Rajini
ரோபோவுக்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தமிழில் ஒரு படம் நடிக்கவிருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

ரஜினியின் குசேலன் திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியானது. படம் குறித்து பல சர்ச்சைகள் விமர்சனங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. இந்தப் படத்தால் தங்களுக்கு நஷ்டம் என ஒரு தரப்பும், இன்னும் சில வாரங்களுக்குப் பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என இன்னொரு தரப்பும் கூறி வருகின்றன.

படத்தை விநியோகித்த பிரமிட் நிறுவன தலைவர் பி.எஸ்.சாமிநாதன், இந்தப் படத்தின் முதல் வார வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மட்டும் இப்படம் முதல் வார (7 நாட்களில்) முடிவில் ரூ.21 கோடி வசூல் செய்திருப்பதாகவும், அடுத்து வரும் நாட்களில் முதலீட்டு திரும்பப் பெற்று விட முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கேரளா, மும்பை, டெல்லி மற்றும் மலேஷியா, அமெரிக்கா போன்ற வெளியிடங்களில் குசேலன் நன்றாக ஓடுவதாக பிரமிட் சாய்மிரா அறிவித்துள்ளது.

இந்நிலையில், தனது ரசிகர்களை இப்படம் முழுமையாக திருப்தி செய்யாததால், மீண்டும் தன் ஸ்டைலில் ஒரு முழுமையான அதிரடி படம் ஒன்றில் ரஜினி நடிக்கப் போவதாகவும், அதை இளம் இயக்குநர் முருகதாஸ் இயக்கப் போகிறார் என்றும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பாட்ஷா படத்தை திரைக்கதை அமைத்துத் தயாரித்த ஆர்எம் வீரப்பன் இந்தப் படத்தைத் தயாரிக்கக் கூடும் என்றும், ஏப்ரல் 14-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமுள்ளதாகவும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நீண்ட நாட்களாக தனக்கு ஒரு படம் செய்து தருமாறு கோரிக்கை விடுத்து வரும் பஞ்சு அருணாச்சலத்தையும் இதில் ஒரு பங்குதாரராக ரஜினி சேர்க்க்கூடும் என்றும் தெரிகிறது.

இந்த ஆண்டு பஞ்சு அருணாச்சலத்துக்கு மணிவிழா என்பதால் அவருக்கு செய்யும் நன்றிக் கடனாக இந்தப் படத்தை ரஜினி செய்யப் போவதாகக் கூறுகிறார்கள் (ரஜினியை கதாநாயகனாக உயர்த்திய முதல் தயாரிப்பாளர்).

ஆனால் இத்தகவல்களை ரஜினியின் அலுவலகம் உறுதி செய்ய மறுத்துவிட்டது. ரஜினி தற்போது குசேலன் வெளியீட்டுக்குப் பின் எழுந்துள்ள புதிய சூழல் குறித்து நண்பர்கள் மற்றும் தனது நலம் விரும்பிகளுடன் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் தனது அடுத்த நடவடிக்கை குறித்து அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டமாக ரஜினி தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களைச் சந்திக்க மடிவு செய்துள்ளாராம். இதற்கான அறிவிப்பு அனைத்து மன்றத் தலைமைக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த சந்திப்புக்குப் பிறகு ரஜினி சில புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X