வில்லன் ஆகும் ஹீரோ!

By Staff

இது ஹீரோக்கள் வில்லன்களாக அவதாரமெடுக்கும் காலம் போலிருக்கிறது.

அஞ்சாதேயில் பிரசன்னா, நாணயம் படத்தில் சிபிராஜ் என ஹீரோ-வில்லன்கள் வரிசையில் இப்போது புதிதாக ஒருவர் சேர்ந்துள்ளார். அவர்... ரமணா.

அந்த நாள் ஞாபகம், நாயகன் என ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர்... இப்போதும் ஹீரோவாக நடித்துக் கொண்டுள்ள ரமணா, தோல்பாவை தியேட்டர்ஸ் தயாரிக்கும் தொட்டுப்பார் படத்தில் அசத்தல் வில்லனாக உருவெடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்த வேடம் ஏற்கத் தயங்கிய ரமணாவிடம், படத்தில் அவரது பாத்திரம் பற்றி இயக்குநர் கூறியதும் பட்டென சம்மதம் சொன்னாராம். கிட்டத்தட்ட கில்லியில் பிரகாஷ் ராஜ் ஏற்றது போன்ற பட்டாசு கிளப்பும் பாத்திரமாம் இது.

பேரரசு உதவியாளர் நந்து இயக்கும் இந்தப் படத்தில், விதார்த - லக்ஷனா ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களைத் தவிர அழகம்பெருமாள், சிங்கமுத்து, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி நந்து கூறும்போது, "படம் முடிந்துவிட்டது. யார் யாரை தொட்டுப் பார்க்கணும் என்பது ஒரு வரி கதை. ஆக்ஷன், காமெடி, குடும்பம், சென்டிமென்ட் எல்லாம் சேர்ந்த கலவையாக படம் உருவாகியிருக்கிறது. ஹீரோவாக நடித்து வந்த ரமணாவிடம் இந்தப் படத்தின் வில்லன் வேடத்தை சொன்னதும் முதலில் மறுத்தார். பிறகு கேரக்டரை கேட்டதும் நானே நடிக்கிறேன் என்றார். இதுவரை தமிழ்சினிமா பார்க்காத கேரக்டராக அவரது கேரக்டர் இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X