'காக்கி'யை கையில் எடுக்கும் சரத்!

வின்சென்ட் செல்வா இயக்க, ஜிஜே கம்பைன்ஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிக்கவிருந்த படம் காக்கி. இப்படத்திற்காக சரத்குமார் பளபளவென மொட்டையும் போட்டார். கிட்டத்தட்ட 30 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் திடீரென படம் நிறுத்தப்பட்டு விட்டது.
இந்த நிலையில் மீண்டும் காக்கியை கையில் எடுத்துள்ளார் சரத்குமார். விரைவில் லண்டன் சென்று சில பாடல் காட்சிகளைப் படமாக்கவுள்ளனராம்.
படத்தில் கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக வருகிறார் சரத்குமார்.
தற்போது 1977 படத்தில் பிசியாக இருக்கும் சரத்குமார், அதை முடித்து விட்டு கே.எஸ்.ரவிக்குமாரின் ஜக்குபாயில் நடிக்கவுள்ளார். அப்படியே காக்கியையும் முடித்து விட திட்டமிட்டுள்ளாராம்.
இதுதவிர மலையாளத்தில் மம்முட்டியுடன், பழசிராஜாவிலும் நடித்து வருகிறார் சரத்குமார்.
தனது கட்சித் தொண்டர்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்காக வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் உள்ளாராம் சரத்.


Click it and Unblock the Notifications











