ராஜசேகர ரெட்டியாக நடிக்கும் ஷாம்

By Staff

Shaam with Sneha
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியாக திரையில் தோன்றப் போகிறார் நடிகர் ஷாம்.

தெலுங்கில் ரவி தேஜாவின், 'கிக்' படத்தில் வில்லனாக நடித்த ஷாம், இப்போது ஆந்திராவில் ஏகத்துக்கு பாப்புலராகி விட்டார். ஏராளமாக வந்த வாய்ப்புகளில், இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் நிஜஅரசியல்வாதி கதைக்கு ஷாம் ஓகே சொல்லிவிட்டார்.

ஏற்கனவே போக்கிரி உள்ளி்ட்ட மெகா ஹிட் படங்களை இயக்கியுள்ள பூரி, தற்போது, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கதையை படமாக எடுக்கிறார்.

ராஜசேகர ரெட்டியின் இளம் பருவம் உண்மையிலேயே அதிரடியான திருப்பங்கள் கொண்டது என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ராஜசேகர ரெட்டியாக நடிப்பது குறித்து ஷாம் கூறுகையில், 'ராஜசேகர ரெட்டி நிஜத்திலும் பாடி பில்டர் தான். ராஜசேகர ரெட்டியின் ரோலை செய்வது எனக்கு பெருமை, சந்தோஷம். ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ஆர்வமாக காத்திருக்கிறேன்' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X