மறுபடியும் ஹீரோவாகும் தங்கர்!

By Staff

Sneha with Thankar Bachan
இயக்குநர் தங்கர் பச்சான் மீண்டும் ஹீரோ அவதாரம் பூணுகிறார்.

தமிழில் உள்ள நல்ல சில இயக்குநர்களில் தங்கருக்கு முக்கிய இடம் உண்டு. கதைகளே இல்லாமல் வெளி வரும் பல படங்களுக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான கதைகளுடன் உயிரோட்டமான படங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பவர் தங்கர்.

பல நல்ல படங்களுக்கு மத்தியில் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் மூலம் உச்சத்திற்குப் போனவர் தங்கர். அப்பட விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், அத்தனை நடிகர்களும் நிச்சயம் தங்கரின் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று நெகிழ்ந்து போய் பேசினார்.

ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. சிறப்பான படங்களைக் கொடுத்தாலும் கூட பல முன்னணி இயக்குநர்கள் தங்கரின் படத்தில் நடிக்க மறுத்து வருகிறார்கள். இதுதான் நிதர்சனம்.

சமீபத்தில் தனது புதிய படத்திற்கான ஹீரோவைத் தேடி சோர்ந்து போய் விட்டாராம் தங்கர். அவர் அணுகிய அத்தனை முன்னணி ஹீரோக்களும் சப்பைக் காரணங்களை சொல்லி தவிர்த்து விட்டனராம்.

இதனால் வெறுத்துப் போய் விட்ட தங்கர், இனிமேல் முன்னணி ஹீரோக்களை அணுகவே மாட்டேன் என்று சபதமே போட்டுள்ளாராம். மேலும், தனது அடுத்த படத்தில் தானே நாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

தங்கர் முதன் முதலில் நடிகராக அரிதாரம் பூசிய படம் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி. அப்படம் தங்கரை நல்ல நடிகராகவும் அடையாளம் காட்டியது. நவ்யா நாயருக்கு தமிழில் பெரிய பிரேக் கொடுக்க உதவியது.

அதன் பின்னர் பள்ளிக்கூடம் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் தங்கர். இந்த நிலையில் மீண்டும் முழு நீள ஹீரோவாக நடிக்க வருகிறார் தங்கர்.

இப்படத்திற்காக தனது கெட்டப்பிலும் சில மாற்றங்களை செய்யவுள்ளார். இதற்காக முதலில் எடையைக் குறைத்து டிரிம் ஆகும் வேலையில் இறங்கியுள்ளாராம் தங்கர்.

வழக்கம் போல இதுவும் ஒரு நிஜக் கதைதானாம். அத்தோடு உணர்ச்சிப்பூர்வமான கதையும் கூட என்கிறார் தங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X