விக்ரமுக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்!

By Staff

Vikram with Asin
மணிரத்னம் இயக்கும் புதிய தமிழ்-இந்தி இரு மொழிப் படத்தில் ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் விக்ரம்.

ரூ.120 கோடி பட்ஜெட்டில் மணிரத்னம் பிரமாண்டமாக உருவாக்கும் இந்திப் படம் ராவண். ராமாயணக் கதையின் நவீன வடிவமாக மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தில் அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்கள்.

இதே படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரம்-ஐஸ்வர்யா ஜோடி போடுகிறார்கள். அபிஷேக் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து விக்ரம் கூறியிருப்பதாவது:

மணிரத்னம் சாரின் இந்திப் படத்திலும் நான் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். ஆனால் அந்த வேடம் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. ஆனாலும் ஒரு சின்ன ஏக்கம். முதல்முதலாக நான் நடிக்கும் இந்திப் படத்தில் ஹீரோவாக நடிக்க முடியவில்லையே என்பதுதான். ஆனால் மணிரத்னம் போன்ற ஜாம்பவான் படத்தில் எந்த வேடமும் தரமானமாதாகத்தான் இருக்கும்.

அதன் தமிழ் பதிப்பில் நான்தான் ஹீரோ. ஐஸ்வர்யா ராய்தான் நாயகி. அபிஷேக், ஐஸ்வர்யா இருவரையும் எனக்கு நன்றாக தெரியும். அவர்களுடன் சேர்ந்து நடிப்பது புது அனுபவம். குறிப்பாக உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பது எனக்குக் கிடைத்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ஷூட்டிங் துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..., என்றார் விக்ரம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X