'விளையாட்டுப் பிள்ளை' விஷால்!

முதல் முறையாக இப்படத்தில் 3 நாயகிகளுடன் ஜோடி போடப் போகிறார் விஷால்.
விஷாலின் முந்தைய படமான சத்யம் படத்தில் இணை இயக்குநரா பணியாற்றிய திரு இப்படத்தை இயக்கவுள்ளார்.
தற்போது தோரணை படத்தில் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் விஷால். கோடை விடுமுறைக்கு இப்படம் ரசிகர்களை குஷிப்படுத்த திரைக்கு வருகிறதாம்.
இப்படத்தில் ஷ்ரியா, விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தை தெலுங்கிலும் பிஸ்தா என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.
சமீபத்தில்தான் செல்வராகவன் இயக்கத்தில் விஷால் நடிப்பதாக இருந்த படம் கைகழுவப்பட்டது. இதையடுத்து திரு இயக்கத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளைக்கு வருகிறார் விஷால்.
More from Filmibeat
சினிமா தமிழ் தீராத விளையாட்டுப் பிள்ளை பிரகாஷ் ராஜ் விஷால் ஷ்ரியா cinema prakash raj shriya theeratha vilayattu pillai vishal


Click it and Unblock the Notifications











