3 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்த 2.0: புதிய சாதனை படைத்த ரஜினி
சென்னை: 2.0 படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளதாம்.
ரஜினியின் 2.0 படம் கடந்த 29ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸானது. 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான படத்தின் வசூல் நேற்று முதல் நன்றாக பிக்கப்பாகியுள்ளது.
ரிலீஸ் நாளை விட நேற்று பல தியேட்டர்களில் இருக்கைகள் அதிக அளவில் நிரம்பியிருந்தன.

வசூல்
2.0 படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை 2.0 இந்தி படம் ஓடிய தியேட்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. ரஜினியின் சொந்த இடமான தமிழகத்தை விட பிற மாநிலங்களில் அதிக வரவேற்பு கிடைத்திருப்பது வியப்பளிக்கிறது.

இந்தி
2.0 இந்தி படம் அக்ஷய் குமாரால் ஓடுகிறது என்றும் கூறப்படுகிறது. 2.0 இந்தி படம் ரிலீஸான அன்று ரூ. 20 கோடி வசூலித்தது. இந்நிலையில் நேற்று மட்டும் அந்த படம் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. அதாவது முதல் நாளை விட நேற்று கூடுதலாக ரூ. 5 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி
எந்திரன், கபாலி, காலா, 2.0 என்று ரஜினியின் நான்கு படங்கள் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளன. இதன் மூலம் ரூ.200 கோடி வசூலித்த அதிக படங்களுக்கு சொந்தக்கார தென்னிந்திய நடிகர் ஆகியுள்ளார் ரஜினிகாந்த்.

வார இறுதி நாட்கள்
இந்தியா மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் 2.0 படம் வார இறுதி நாட்களில் கூடுதல் வசூல் நடத்தி வருகிறது. 2.0 படம் அமெரிக்காவில் இதுவரை ரூ. 18.50 கோடி வசூலித்துள்ளது.


Click it and Unblock the Notifications











