2.0 பார்ப்பவர்கள் அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க: தனுஷ்

By Siva

Recommended Video

2.0 படம் பார்த்து அசந்து போன ரசிகர்கள்.. வீடியோ

சென்னை: 2.0 படம் பார்ப்பவர்கள் இந்த தப்பை மட்டும் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் இன்று வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. விஷுவல் எஃபெக்ட்ஸ் பற்றி பேசாதவர்களே இல்லை.

ஷங்கர் ஹாலிவுட் ரேஞ்சில் படம் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்.

விமர்சனம்

விமர்சனம்

ஊரே 2.0 படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவிக்கிறது. ஆனால் ரஜினியின் தீவிர ரசிகனும், மருமகனுமான தனுஷ் கம்முன்னு இருக்கிறாரே என்று பேசப்பட்டது. தலைவர் படத்தை தனுஷ் பார்க்காமலா?. பார்த்துவிட்டார், கருத்தும் தெரிவித்துவிட்டார். ஆனால் கொஞ்சம் லேட்டா ட்வீட் செய்துள்ளார் அவ்வளவு தான்.

தலைவர்

2.0 ஹாலிவுட் படத்திற்கு இணையாக உள்ளது. மைண்ட் புளோயிங். தலைவா தி ஒன்லி ஒன். தமிழ்/இந்திய சினிமாவின் பெருமை ஷங்கர் சார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை தியேட்டர்களை தவிர வேறு எங்கும் பார்க்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார் சார் கதாபாத்திரமாகவே மாறியுள்ளீர்கள். கடவுளின் குழந்தையான ஏ.ஆர். ரஹ்மானுக்கு சல்யூட். ஜீனியஸ் நிரவ் ஷா, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் சார் மற்றும் என் தோழி ஏமி ஜாக்சனுக்கு வாழ்த்துக்கள் என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

ஆன்லைன்

ஆன்லைன்

2.0 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள படம். இதை தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும். ஆன்லைனில் பார்த்தால் சகிக்காது. 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. ஆனால் 3டி எஃபெக்ட் அதில் இருக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X