பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம்: சல்மான் கான் மீது வழக்கு!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஏற்கெனவே மான்வேட்டை, குடித்துவிட்டு கார் ஓட்டி பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றியது என பல வழக்குகளில் சிக்கியுள்ளார்.
இப்போது பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியை ஆபாசமாக தொகுத்து வழங்கியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. உத்தரபிரதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலர்ஸ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை அப்படியே காட்சிப்படுத்தி காட்டுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. மத்திய அரசும் இந்த நிகழ்ச்சியை நள்ளிரவுக்கு மேல் ஒளிபரப்பும்படி உத்தரவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட டிவி இதற்கு நேற்று இடைக்காலத் தடை வாங்கியது. இந்த நிலையில் சல்மான்கான் மீது நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வருகிற 24-ந்தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











