படிக்காதவனில் தனுஷ்

பழைய ஹிட் படங்களின் பெயர்களை சூட்டி புதுப் படங்கள் எடுப்பது கோலிவுட்டின் இன்றைய ஸ்டைல். அந்த வகையில் பல பழைய படங்களின் ைட்டில்களை எடுத்துக் கொண்டு புதுக் கதை புனைந்து படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் கோலிவுட்டினர்.
இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு படிக்காதவன் என்ற பெயரை சூட்டவுள்ளனர். பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான விஜயா கம்பைன்ஸ் நிறுவனம் இப்படத்தை எடுக்கவுள்ளனர்.
சுந்தர்.சி.யின் முன்னாள் உதவியாளரும், இயக்குநருமான சுராஜ் இப்படத்ைத இயக்கவுள்ளார். படம் காமெடி கலந்த காதல் கதையாம்.
இப்படத்துக்கு ரஜினி பட டைட்டில் ஒன்றை சூட்ட தனுஷ்தான் விரும்பினாராம். இதையடுத்து படிக்காதவன், விடுதலை ஆகிய இரு ரஜினி படத் தலைப்புகளை சுராஜ் பரிந்துரைத்தார். அதிலிருந்து படிக்காதவன் டைட்டிலை தனுஷ் தேர்வு செய்துள்ளாராம்.
இந்தப் படம் தவிர, வெற்றிமாறன் இயக்கத்தில் புதுப் படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்கவுள்ளாராம். பொல்லாதவன் படத்ைதக் கொடுத்தவர்தான் வெற்றி மாறன். இந்த பொல்லாதவனும், ரஜினி பட தலைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுய சரக்கை விட்டு விட்டு அயல் சரக்குக்கு கோலிவுட் அலைவது ஏனோ?


Click it and Unblock the Notifications











