சோட்டா மும்பை... சுறா... 'தல': ஒரு 'எஃப்ஐஆர்'!

படம் படு சுறுசுறுப்பாக வளர்ந்து வருகிறது. கதை பலவீனமாக இருப்பதாக வேட்டைக்காரன் குறித்து டாக் உலா வர ஆரம்பித்துள்ள நிலையில், விஜய்க்கு நெருக்கமான இயக்குநர்கள் கூறுகையில், சுறா திரைப்படம் நிச்சயம் காதலுக்கு மரியாதை ரேஞ்சுக்கு ஜெயிக்கும் என்று கூறத் தொடங்கியுள்ளனர்.
காரணம் இந்தப் படத்தின் மூலக்கதை அந்த அளவு வலுவானதாம்.
மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடிப்பில் அன்வர் ரஷீத் இயக்கிய படம் சோட்டா மும்பை.
முழுக்க முழுக்க காமெடி, குடும்ப சென்டிமெண்ட், தேவைப்படும் நேரத்தில் மட்டும் ஆக்ஷன் என பக்கா பொழுதுபோக்குப் படமாக வந்து மலையாளத்தில் வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.
அந்தப் படத்தைத்தான் இப்போது சுறவாக ரீமேக்கி வருகின்றனர். சோட்டா மும்பை சூப்பர் ஹிட் என்பதால்தான் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை எஸ்பி ராஜ்குமாருக்குக் கொடுத்தாராம் விஜய்.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான சமாச்சாரமிருக்கிறது.
சோட்டா மும்பையில் மோகன்லாலின் பெயர் 'தல'. காட்சியின் இடது - வலது கோணம் கூட மாற்றாமல் அப்படியே சுடும் விஜய்யின் இயக்குநர்கள், இந்தப் பெயரை மாற்றுவார்களா... அல்லது தல என்ற பெயரையே மெயின்டெய்ன் பண்ணுவார்களா?
பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











