பாயா... டீ..: கமலின் மலரும் நினைவுகள்

ஆழ்வார்பேட்டையில் எல்டாம்ஸ் சாலை முனையில் கமல் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது சாம்கோ. 45 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த ஓட்டல் கடந்த 6 மாதங்களாக புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த ஓட்டலை 'பக்கத்து வீட்டுக்காரரான' கமல்ஹாசன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தார்.
அவர் பேசுகையில், சாம்கோ ஒரு அசைவ உணவகம் மட்டுமல்ல. நல்ல சைவ உணவகமும்கூட. இங்கு டீயும் கிடைக்கும், பாயாவும் கிடைக்கும். நான், எஸ்வி சேகர், மணிரத்னம், இன்னும் பல நண்பர்கள் இந்த ஓட்டலுக்கு ரெகுலர் விஸிட்டர்ஸ். அதற்கும் முன்பு ஒரு டீயை வாங்கி நண்பர்கள் மூன்றாகப் பகிர்ந்து குடித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன, என்று மலரும் நினைவுகளுக்குப் போனார்.
'மலபார் மற்றும் அராபிய வகை உணவுகள் இங்கு கிடைக்கின்றன. நவீன சமையல் உபகரணங்கள், தரமான உணவுப் பொருட்களைக் கொண்டு இங்கே உணவுகள் தயாரிக்கப்படு'வதாகக் குறிப்பிட்டார் சாம்கோ தொடர்பாளர் சிராஜ்.
நிகழ்ச்சியை நிகில் முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications











