விடாக்கண்டன், கொடாக்கண்டன்!

இரு ஹீரோக்கள் இணைந்து படங்களில் நடிப்பது அந்தக் காலத்தில் சாதாரண விஷயம். அதில் பல ஜோடிகள் கிளிக் ஆகி, தொடர்ந்து ஹிட் கொடுத்த வரலாறுகளும் உண்டு.
இந்த வகையில் சத்யராஜ்- கவுண்டமணி, சத்யராஜ்- வடிவேலு, பார்த்திபன்-வடிவேலு ஆகியவை, சமீபத்திய காலத்தில் மெகா ஹிட் ஆன ஜோடிகள்.
இந்த வரிசையில் புதிதாக இடம் பெறப் போகிறது சத்யராஜ் - பார்த்திபன் ஜோடி. நினைத்தேன் வந்தாய், வசீகரா, பிரியமானவளே ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த செல்வபாரதி இயக்கத்தில், விடாக்கண்டன், கொடாக்கண்டன் என்ற படத்தில்தான் சத்யராஜ், பார்த்திபன் ஜோடி சேர்ந்து கலாய்க்கப் போகிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
படம் குறித்து செல்வபாரதி கூறுகையில், இது முழுக்க முழுக்க நகைச்சுவை களேபரம் நிறைந்த படம். அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி மகா ஜாலியாக இருக்கும். படத்தில் சத்யராஜுக்கும், பார்த்திபனுக்கும் ஜோடியாக நடிக்கப் போகிறவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
பார்த்திபன் ஏற்கனவே கவுண்டமணியுடன் டாடா பிர்லா படத்திலும், பிரபுதேவாவுடன் ஜேம்ஸ் பாண்டு படத்திலும் காமெடிக் கலாட்டாவில் இறங்கியுள்ளார். அதேபோல குண்டக்க மண்டக்க படத்தில் வடிேவலுடன் இணைந்து அதகளம் செய்துள்ளார்.
அந்த வரிசையில் இந்த விடாக்கண்டன், கொடாக்கண்டன் காமெடி கலவரமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











