ஐரோப்பாவில் சிபி ஹனிமூன்

புரட்சித் தமிழன் சத்யராஜின் புதல்வரும், நடிகருமான சிபி ராஜுக்கும், அவர் 7 ஆண்டுளாக காதலித்து வந்த ரேவதிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தேறியது.
புது மாப்பிள்ளை சிபிராஜ் தேனிலவுப் பயணத்திற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அக்டோபர் மாதம் தேனிலவுப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளாராம் சிபி.
எங்கே போகப் போகிறீர்கள் என்று கேட்டால், இன்னும் முடிவு செய்யவில்லை. அனேகமாக ஐரோப்பிய நாடாக இருக்கும். இதுவரை ரேவதி போகாத ஐரோப்பிய நாட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளேன் என்கிறார் புன்னகையுடன்.
தேனிலவுப் பயணத்தை முடித்து விட்டு வந்தவுடன் கெளரவ், செளரவ் சர்மாவின் தயாரிப்பில் புதுப் படத்தில் நடிக்கவுள்ளாராம் சிபி.
Comments


Click it and Unblock the Notifications