செக் மோசடி வழக்கு: காஞ்சிபுரம் கோர்டில் நடிகர் சிட்டி பாபு ஆஜர்

சின்னத் திரை மற்றும் பெரிய திரையில் காமெடியில் கலக்கி வருபவர் சஜாயத் அஜீப் (எ) சிட்டி பாபு. அவர் சிட்டி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அதற்காக கடந்த 2008-ம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் கடனாக ரூ. 2 லட்சம் வாங்கினார்.
கடனைத் திருப்பிக் கொடுக்கையில் ரொக்கமாக கொடுக்காமல், செக்காக கொடுத்தார். ஆனால் அந்த செக், சிட்டிபாபுவின் வங்கிக் கணக்கில் பணமில்லாமல் திரும்பி விட்டது. இதையடுத்து ஆறுமுகம் சிட்டி பாபு மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு காஞ்சிபுரம் ஜெ.எம்-1 நீதிமன்றத்தில் நடக்கிறது. இதில் ஆஜராகுமாறு சிட்டி பாபுவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே அவர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Comments


Click it and Unblock the Notifications