ராணுவ அகாடெமியில் வாரணம் ஆயிரம்!

குத்து ரம்யா (இந்தப் பெயர்தான் வசதியா இருக்கு எழுத!), சமீரா ரெட்டி மற்றும் வயசான சிம்ரன் ஜோடிகளுடன் சூர்யா நடிக்கும் இந்தப் படத்துக்கு ஆரம்ப முதலே ஏக பில்டப்!
ஆஸ்கார் ரவிச்சந்திர் தயாரிப்பில் ஆப்கானிஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்பதில் தொடங்கி பில்ட் அப்புக்கு பஞ்சமே இல்லை. ஓவர் பட்ஜெட் என்ற குற்றச்சாட்டு காரணமாக இடையில் தயாரிப்பாளர் கவுன்சில் பஞ்சாயத்து வேறு.
எல்லாம் முடிந்து கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகிவிட்டது படம். முதல்கட்டமாக இம்மாத கடைசியில் ஆடியோ ரிலீஸ் வைத்திருக்கிறார்கள் ஆடியோ உரிமை பெற்றுள்ள சோனி நிறுவனத்தினர்.
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சமாக, டேஹ்ராடூன் ராணுவ அகாடமியில் நேரடியாக படமாக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார் இயக்குநர் கவுதம் மேனன்.
கண்டிப்புக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்ற இந்த ராணுவப் பள்ளியில் படமாக்கப்பட்ட இரண்டாவது படம் வாரணம் ஆயிரம்தானாம்.
இதற்கு முன் ஹ்ரித்திக் ரோஷனின் லக்ஷயா இங்கு படமாக்கப்பட்டுள்ளது.
தமிழைப் பொறுத்தவரை, இங்கு இதற்குமுன் வேறெந்தப் படமும் எடுக்கப்பட்டதே இல்லை, என்கிறார் கவுதம்.
இந்தப் படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் சூர்யா.


Click it and Unblock the Notifications











