சபரி மலையில் ஜெயராம்!

மண்டல பூஜைக்காக சபரிமலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருமுடி சுமந்து அய்யப்ப சுவாமியை தரிசித்து வருபவர் நடிகர் ஜெயராம். எந்த சோதனையிலும் அவர் தனது சபரி மலைப்பயணத்தை நிறுத்தியதில்லை.
எர்ணாகுளத்தில் 'ஹாப்பி ஹஸ்பன்ட்ஸ்' என்ற மலையாள படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற ஜெயராம், தனது ஷெட்யூலை முடித்துக் கொண்டு, மார்கழி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று இரு முடி கட்டி சபரி மலைக்கு சென்றார்.
பெரும்பாவூர் அய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று நடந்த நெய் அபிஷேகத்திலும், உச்சிக்கால பூஜை யிலும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் ஜெயராம்.
Comments


Click it and Unblock the Notifications