சுயசரிதை எழுதும் 'மைக்' மோகன்!

மைக் மோகன் என்றால்தான் பலருக்கு சட்டென அடையாளம் தெரியும். பயணங்கள் முடிவதில்லை தொடங்கி, இதயக் கோயில் வரை.... அந்த அளவுக்கு தனது படங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு காட்சியிலாவது மைக்கும் கையுமாக வந்து நிற்பார்.
தொன்னூறுகள் வரை நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த மோகன், கடைசியில் சுட்ட பழம் என்ற கில்மா படத்தில் நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட, இப்போது தனது சுயசரிதையை எழுதத் தொடங்கியுள்ளாராம்.
இதனை வழக்கமான சுயசரிதை போல எழுதாமல், கேள்வி பதில் பாணியில் எழுதுகிறாராம் மோகன். முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அறந்தை நாராயணன் எழுதியது போன்ற புத்தகமாக இதனை உருவாக்கி வருகிறாராம்.
அதேநேரம், சினிமாவில் தான் முழுமையாக ஓய்ந்து விடவில்லை என்பதை உணர்த்தும் விதமாக, புதிய படம் ஒன்றில் நடிக்கும் முயற்சியிலும் தீவிரமாக உள்ளாராம் மோகன்.
Comments


Click it and Unblock the Notifications