தெலுங்கில் 'மாட்லாடப்' போகும் விஜய்!

By Sudha

இத்தனை காலமும் வேறு மொழிகளில் நடிக்கிறீர்களா என்று யார் கேட்டாலும், 'அய்யோ நான் தமிழனுங்ணா' என கவுண்டர் பாணியில் கூறிவந்த விஜய், இப்போது அந்த தமிழன் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு தெலுங்குப் பக்கமும் எட்டிப் பார்க்க ஆர்வம் காட்டுகிறாராம் (இது சுறா எஃபெக்டா என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுங்னா!)

ஆம்... முதல் முறையாக ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறாராம் விஜய்.

அது த்ரீ இடியட்ஸின் தெலுங்கு ரீமேக்.

ஷங்கர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய், ஆர்யா மற்றும் ஜீவா நடிக்கின்றனர். தெலுங்கில் விஜய் பாத்திரத்தில் மகேஷ்பாபு நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது.

ஆனால், தெலுங்கிலும் விஜய்யே நடித்தால் என்ன? என்று அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தனது முன்னாள் சிஷ்யரான ஷங்கரிடம் (எஸ்ஏசியிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் ஷங்கர்!) கேட்டுள்ளார். சற்று யோசித்த ஷங்கரிடம், இதற்கு முன் விஜய்யின் டப்பிங் படங்கள் சில தெலுங்கில் நன்றாக ஓடியதாக புள்ளி விவரமெல்லாம் சொன்னாராம் (விஜய் படங்களில் 90 சதவீதம் தெலுங்கு ரீமேக்தான் என்பது குறிப்பிடத்தக்கது!).

இப்போது ஒரு வழியாக விஜய்யை தெலுங்கில் அறிமுகப்படுத்தவும் ஒப்புக் கொண்டாராம் ஷங்கர்!

ஆக.. விரைவில் விரல் சொடுக்கி தெலுங்கில் பஞ்ச் டயலாக் விடப் போகிறார் விஜய்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X