»   »  விஜய் இன்று ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!

விஜய் இன்று ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!

By Shankar
Subscribe to Oneindia Tamil
Vijay
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவதைக் கண்டித்து இன்று நாகையில் நடக்கும் நடிகர் விஜய்யின் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினரும் பங்கேற்கிறார்கள்.

தமிழக அரசியலில் இது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் விஜய் ரசிகர் மன்றங்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு சாதகமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அரசியலில் ஈடுபடத் துடிக்கும் விஜய்யின் முதல் அரசியல் நிகழ்வு நாளை நடக்கும் ஆர்ப்பாட்டம்தான். இதில் பல லட்சம் ரசிகர்களைக் கூட்டி, தனது பலத்தையும் காட்ட விரும்புகிறார். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தப் போகிறவரும் விஜய்தான்.

இந்த ஆர்ப்பாட்டம், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், ரசிகர் மன்ற செயலாளர் ரவிராஜா ஆகியோர் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகிறது.

விஜய்யின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுகவின் முழு ஆதரவு தேவை என்று எஸ் ஏ சந்திரசேகரன் ஜெயலலிதாவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தங்கள் ஆதரவு குறித்து ஜெயலலிதா வெளிப்படையாக அறிக்கை ஏதும் தரவில்லை. அதே நேரம், திரளான அதிமுக தொண்டர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

மாவட்ட அளவில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கத் தயாராகி வருகிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The high command of AIADMK has ordered the members and district level functionaries to support the protest of Vijay for Tamil Nadu fishermen on 22nd Tuesday.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more