twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போலி 'பேட்டிகள்' - அர்ஜூன் டென்ஷன்!

    By Staff
    |

    Arjun with Nila
    என்னிடம் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ கூடப் பேசாமல், என்னைப் பேட்டி எடுத்ததாக சிலர் செய்திகளை வெளியிடுவது வேதனை அளிக்கிறது, என்கிறார் ஆக்ஷன் கிங் அர்ஜூன்.

    ரஜினியின் படத்தில் அர்ஜூன் நடிக்கப் போவதாக கொஞ்ச நாட்களாகவே செய்திகள் சுற்றிக் கொண்டுள்ளன. சிலர் அவர் ரோபோவில் வில்லனாக நடிப்பதாகவும், இன்னும் சிலர், இல்லையில்லை, குசேலனில் ஒரு பாடலில் முன்னணி நட்சத்திரங்களுடன் தோன்றுகிறார் என்றும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

    இந்நிலையில், தான் ரஜினியின் எந்தப் படத்திலும் நடிக்கும் உத்தேசமே இல்லை என்று அர்ஜூன் பேட்டி அளித்ததாக சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்ததன. மும்பையிலிருந்தவரை கஷ்டப்பட்டு தேடிப் பிடித்து இந்த பேட்டியை எடுத்ததாக வேறு க்ளெய்ம் பண்ணியிருந்தார்கள்.

    சில தினங்களுக்கு முன்பு நடந்த நடிகை விந்தியாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அர்ஜூனைச் சந்தித்தோம். அப்போதும் கூட ரஜினி படத்தில் நடிப்பது குறித்து எந்த மறுப்பும் அவர் கூறவில்லை. அப்புறம் சொல்றேனே என்று மட்டும் நம்மிடம் தெரிவித்திருந்தார்.

    நாமும் விடாமல் தொலைபேசியில் அர்ஜூனைப் பிடித்தோம். அவர் நம்மிடம் கூறியது என்னவென்றால், ரஜினியின் படத்தில் நான் நடிப்பது ஒருபக்கமிருக்கட்டும். அதுக்குள்ள என்னை அவர் படத்திலிருந்து தூக்கிட்டு, அதுபத்தி நானே பேட்டி கொடுத்ததா நியூசும் போட்டிருக்காங்க.

    பாருங்க... இதுவரைக்கும் யார்கிட்டயும் ரஜினி சார் படத்துல நான் நடிக்கலன்னு பேட்டியெல்லாம் குடுக்கல. என்கிட்ட பேசாமலேயே அவங்களா ஏதோ இஷ்டத்துக்கு எழுதறாங்க.

    எனிஹவ்... நான்தான் அப்பவே சொன்னேனே பாஸ்.. இன்னும் சில தினங்களுக்குப் பிறகுதான் நான் எதையும் சொல்ல முடியும். அதுக்குள்ள இப்படியெல்லாம் செய்தி வர்றதால ரஜினி சார்தான் வருத்தப்படுவார்.

    ஏன்... கமல் சார் படத்துல நடிச்ச நான் ரஜினி சார் படத்துல நடிக்க மாட்டேனா... பட், இன்னும் எதுவும் முடிவாகல... என்றார் அர்ஜூன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X