நயாகராவில் கேப்டன் 'டண்டணக்கா'

By Staff

Vijaykanth and NavneethKaur
150 வது படமான அரசாங்கத்துக்காக, நயாகரா மற்றும் குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் நடிகை நவ்நீத் கவுர் மற்றும் புதுமுகம் ஷெரில் பிண்டோவுடன் செமத்தியாக ஆடி டூயட் பாடியிருக்கிறார் கேப்டன் விஜய்காந்த். படம் ஏப்ரல் 14-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

விஜய்காந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அவரது 150 வது படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது அரசாங்கம். ரமணா மாதிரி அழுத்தமான கதையின் அடிப்படையில் எடுக்கப்படும் ஆக்ஷன் படமாம் இது.

"கேப்டனின் ரசிகர்களுக்கு இந்தப் படம் உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற படமாகவும், அதே நேரம் அவரது மற்ற படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான அம்சங்களைக் கொண்டதாகவும் இந்தப் படம் அமையும்" என்கிறார் படத்தின் இயக்குநரான மாதேஷ்.

ஒரு புத்திசாலிக்கு முன் கத்திச் சண்டை வீரன் கூட தோற்றுப் போவான் என்பதை மையக் கருவாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்தில், அசாமில் உள்ள பகத்சிங் ஐ.பி.எஸ். பயிற்சிப் பள்ளியில் பணியாற்றும் பேராசிரியராக வருகிறாராம் விஜயகாந்த்.

ஒரு முக்கிய வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு இவர் வசம் ஒப்படைக்கப்பட, அந்தக் கொலையாளியைத் தேடுகிறார். கடைசியில் அவர் கனடாவில் இருப்பதை அறிந்து கனடாவுக்கே போகிறார் கேப்டன்.

போகிற இடத்தில் காதல், மோதல் என பல சுவாரஸ்யங்கள் சேர்ந்துகொள்ள, நயாகராவில் வினீத் கவுர் மற்றும் ஷெர்லின் பிண்டோவுடன் டூயட் பாடியபடி வில்லன் கோஷ்டியைப் பந்தாடுகிறாராம்.

இது சும்மா சாம்பிள்தானாம். இதைவிட இன்னும் ஏகப்பட்ட 'சுனாமிகள்' உண்டாம் படத்தில். கேப்டனின் மனைவியாக வரும் நாயகி நவ்னீத் கவுர் இதில் வங்கி அதிகாரி வேடத்தில் நடித்துள்ளாராம்.

தொன்னூற்றைந்து சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். ஒரே ஒரு ஐட்டம் பாட்டையும், சில பல ஒட்டு வேலைக் காட்சிகளும் எடுக்க வேண்டியதுதான் பாக்கியாம். கனடா நாட்டு அழகி ஒருவரும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.

தவிர ஏகப்பட்ட அனுபவப்பட்ட நடிகர்கள் பலர் பட்டாளமே இப்படத்தில் கேப்டனுடன் பட்டையைக் கிளப்பியுள்ளனராம்.

கபிலன், பா.விஜய் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கேமிராவை ஏ.வெங்கடேஷ் கையாள்கிறார்.

இந்தப் படத்தின் தலைப்புக்கு அடியில் 'முடிவில்லாத போராட்டம்' என பஞ்ச் லைன் போட்டிருக்கிறார் இயக்குநர். படத்தின் பெயரில் அரசாங்கம் இருந்தாலும், இதில் பஞ்ச் டயலாக்குகள், அரசியல் வசனங்கள் எதுவும் கிடையாதாம். ஆனால் கதையோடு வருவது போன்ற சில அரசியல் காட்சிகள் இருக்குமாம்.

குறிப்பிட்ட தேதிக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்து விட்டதால் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது கேப்டனின் அரசாங்கம். இந்தப் படம் வெளியான கையோடு அடுத்த படத்தை ஆரம்பிக்க வேண்டுமென தன் மச்சானும் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிர்வாகியுமான சுதீஷுக்கு ஆர்டர் போட்டிருக்கிறாராம் கேப்டன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X