twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பா விஜய் ஆர்வம்... பாராட்டிய முதல்வர்!

    By Staff
    |

    Pa Vijay
    செம்மொழி மாநாடு எப்படி இருக்க வேண்டும், நுழைவாயில் எப்படி அமைய வேண்டும் என்றெல்லாம், கருணாநிதி சொல்லும் முன்பே, ஆர்வமாக டிசைன் செய்த பா விஜய்யை முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட கடிதத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்:

    நடைபெறப் போவது நமது செம்மொழிக்கான மாநாடு. இதிலே அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை மனதிலே கொண்டு அனைவரையும் தமிழ்ப் பணி புரிந்திட உரிமையோடு அழைத்திடுகின்றேன்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு தம்பி கவிஞர் பா.விஜய் என்னைச் சந்தித்தார். அவரது கையிலே ஏராளமான ஓவியங்கள், சில புத்தகங்கள். அவற்றையெல்லாம் என்னிடம் அவசர அவசரமாக நேரமின்மை காரணமாகக் காட்டினார்.

    அந்த ஓவியங்கள் எல்லாம் மாநாட்டின் முகப்பு இப்படி இருக்கலாமா என்பதற்காக அவரே ஓவியரை வைத்து வரைந்து கொண்டு வந்திருந்ததையும், மாநாட்டினையொட்டிய சிறப்பு மலரின் அட்டைப் படம் இப்படியிருக்கலாமா என்பதற்கு பல படங்களையும் காட்டினார். அதையெல்லாம் பார்த்தவுடன் நான் வியப்பில் ஆழ்ந்து விட்டேன்.

    மாநாட்டுப் பணிகளிலே அவரை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று உடனடியாக முடிவு செய்தேன்.

    வேறு சில வெளிநாட்டினர் மாநாட்டிலே கலந்து கொள்வதற்கான ஆயத்தங்களிலே ஈடுபட்டு விட்டதாகவும், எப்போது ஜுன் திங்கள் வரும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாகவும் தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டுவருகிறார்கள்.

    அந்த வகையில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு ஒரு இடம் அளிக்கப்பட வேண்டும் என்று நான் கருதினேன்.

    இதற்கிடையே அவர் டிசம்பர் 16-ம் தேதியிட்டு எழுதிய கடிதத்தில், "எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் நான் இல்லை" என்று எழுதி இருக்கிறார்.

    இந்தக் கடிதத்தைக் கண்டவுடன் நாம் அறிவித்த குழுவிலே இடம்பெற மறுத்துவிட்டாரே என்று நான் எண்ணவில்லை. அவர் கடிதம் கிடைத்த சில நிமிடங்களுக்கெல்லாமே - அவருக்கு நான் ஒரு பதில் எழுதினேன்.

    இந்த என் கடிதத்தை நான் அனுப்பிய சில மணி நேரங்களிலேயே எனக்கு வைத்தியநாதனிடமிருந்து நல்லதோர் பதில் கிடைத்தது.

    இதுபோல, என் வேண்டுகோளையேற்று முதலில் வர மறுத்துள்ளோரும் இவர்போல் வளமிகு தமிழுக்கு வலிமை சேர்க்க முனைவோர் உளமகிழ்ந்து ஒன்றாகக் கூடி கோவையில் செம்மொழிக் கொடியேற்றி குதூகலிக்க இருப்பது கண்டு தேன் கலந்த தெவிட்டாத அமுதுண்ணும் இன்பத்தை உலகத் தமிழர்களாம் நாமெல்லாம் பெறும் அரிய வாய்ப்பில் ஓரிருவர் குறையினும், அஃதோர் குறையென நான் எண்ணுவதால்தான், அதை எதிரொலிக்கும் இக்கடிதப் போக்குவரத்தை வெளியிட்டுள்ளேன், என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X