செஞ்சுரி அடித்த தசாவதாரம்!

By Staff

Kamal in Dasavatharam
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் நூறு நாட்களைத் தாண்டியுள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான கமல் படம் என்பதாலும், வேட்டையாடு விளையாடு படத்துக்குப் பிறகு கமல் அடித்துள்ள சிக்சர் என்பதாலும் கமல் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

ஆளவந்தானுக்குப் பிந்தைய கமல் படங்களில் ஹேராம், விருமாண்டி போன்றவை பேசப்பட்டாலும் வர்த்தக ரீதியாக பெரிய அளவில் கமலுக்கு ஆறுதலைத் தரவில்லை.

அதேசமயம், அடுத்தடுத்து வந்த பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் போன்றவை வசூல் ரீதியாக கையைக் கடிக்கவில்லை.

2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வேட்டையாடு விளையாடு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக கமல் படம் எதுவும் வராததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆனால் காத்திருப்புக்கு சரியான விருந்தாக, ஒன்றுக்கு பத்தாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தி விட்டார் கமல் தசாவதாரம் மூலம்.

திரைக்கதை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. கமலும் கூட ஆமாம் குறை இருக்கிறது என்று கூறியிருந்தார். இருந்தாலும், விமர்சனங்களையும் தாண்டி படம் வெற்றி பெற்றுள்ளது. வசூல் ரீதியாக தயாரிப்பாளரையும், விநியோகஸ்தர்களையும், கலைஞராக கமலையும், இயக்குநராக கே.எஸ்.ரவிக்குமாரையும், நல்ல திரை விருந்தாக ரசிகர்களையும் என சகல தரப்பினரையும் சந்தோஷிக்க வைத்துள்ளது தசாவதாரம்.

நேற்று தசாவதாரத்தின் 100-வது நாள் விழா.

சென்னையில் மட்டும் 6 திரையரங்குகளில் தசாவதாரம் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வெளியே மாயாஜாலில் தொடர்ந்து 100-வது நாலாக ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற ஊர்களிலும் தசாவதாரம் இன்னும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

வெள்ளி விழாவைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X