சேரனி்ன் 5 ஜோடிகள்!!!!!

By Staff

Ramya Nambeesan
'நான் அவனில்லையை' பீட் செய்யும் விதமாக 'ராமன் தேடிய சீதை' படத்தின் நாயகிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.

நான் அவனில்லை படத்தில் சினேகா, ஜோதி்ர்மயி, நமீதா, கீர்த்தி சாவ்லா என நான்கு நாயகிகள் ஜீவனுக்கு ஜோடி சேர்ந்து அசத்தினர். ஒரே படத்தில் நான்கு நாயகிகளா என்று அத்தனை பேரும் வாய் பிளந்தனர். சண்டை வராமல் ஷூட்டிங் முடிந்தால் சரி என்றும் ஆசிர்வதித்தனர். ஆனால் எல்லாம் நல்லபடியாக முடிந்து, படமும் ஹிட் ஆகி சாதனை படைத்தது.

இந் நிலையில் நான் அவனில்லை படத்தை பீட் செய்யும் விதமாக சேரன் நடிக்கும் ராமன் தேடிய சீதை படத்தில் நாயகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.

சேரன் நாயகனாக நடிக்க புதிய கீதை, கோடம்பாக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜெகன்ஜி இயக்கும் படம்தான் ராமன் தேடிய சீதை. இதில் நாயகிகளாக நடிக்க விமலா ராமன், கேரளத்து ரம்யா நம்பீசன், கார்த்திகா, நவ்யா நாயர் என நான்கு பேர் புக் ஆகியுள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் ஒருவித முக்கியத்துவம் படத்தில் இருக்கிறதாம். இவர்களில் நவ்யா நாயர்தான் சீனியர். சேரனுடன் அவர் இணையும் 3வது படமும் கூட.

இந்த நிலையில் ஐந்தாவதாக ஒரு நாயகியும் படத்தில் சேர்ந்துள்ளார். அவர் கஜாலா. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கஜாலா இப்படம் மூலம் நடிக்க வருகிறார்.

கஜாலாவும் படத்தில் சேர்ந்துள்ளதால் மொத்தம் 5 நாயகிகளாகி விட்டார்கள். யாருக்கு என்ன கேரக்டர் என்று ஜெகன்ஜியிடம் கேட்டால், அதை எப்படி ஜி இப்போதே சொல்ல முடியும். படம் வந்த பிறகு பாருங்கள், அசந்து போய் விடுவீர்கள் என்று நைஸாக கழன்று கொள்கிறார்.

இத்தனை நாயகிகள் படத்தில் இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X