கமல்ஹாஸனைத் தோற்கடிக்க ஆசை! - மம்முட்டி

By Staff

Mammootty with Sneha
சினிமாவில் நானும் கமலும் சமகால சாதனையாளர்கள். அவரைவிட ஒரு படி மேலே போக வேண்டும் என்பதே எனது இப்போதைய ஆசை என்றார் நடிகர் மம்முட்டி.

திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "எனக்கும் கமல்ஹாஸனுக்கும் வெளியில் தெரியாத ஒரு போட்டி உள்ளது. இந்தப் போட்டியில் இப்போது நாங்கள் இருவருமே சம நிலையில் உள்ளோம். அதாவது, நானும் மூன்று தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறேன். அவரும் மூன்று தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

இந்த முறை மேலும் ஒரு விருது வாங்கி அவரை முந்த வேண்டும் என்பது என் ஆசை.

என் பயமெல்லாம், இந்தப் போட்டியில் அவர் ஜெயித்துவிடுவாரோ என்பதுதான். அப்படி ஜெயிக்கும் திறனும், அசாத்திய வேகமும் அவருக்கு உண்டு.

அப்படி ஒருவேளை அவர் ஜெயித்தாலும் நான் வருத்தப்பட மாட்டேன். மீண்டும் முயற்சிப்பேன், அவரை முந்த," என்றார்.

தமிழில் மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார் மம்முட்டி. அவர் நடித்து சமீபத்தில் பெரும் வெற்றி பெற்ற பழஸி ராஜா படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X