தொடரும் லாரன்ஸின் மனிதேநேயம்

சில வாரங்களுக்கு முன் 36 ஏழைக் குழந்தைகளுக்கு இருதய சிகிச்சைக்காக பொதுமக்களிடம் உதவி கேட்டிருந்தார். தனக்குக் கிடைத்த நிதி மூலம் ஒரு குழந்தைக்கு சிகிச்சை செய்துவிட்டு, மேலும் பணத்துக்காக்க் காத்திருந்தார் லாரன்ஸ்.
அப்போதுதான், பத்திரிகைகள் மூலம் இதைத் தெரிந்துகொண்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்வந்து உடனடியாக குழந்தைகளுக்கு ஆகும் மொத்த மருத்துச் செலவையும் ஏற்றுக் கொண்டார்.
இப்போது அத்தனைக் குழந்தைகளுக்கும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருதய சிகிச்சை அளிக்கப்பட்டு, நலமுடன் வீடு திரும்பிவிட்டனர்.
அத்தோடு தன் சமூகப் பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைக்காத லாரன்ஸ், தன் அடுத்த சேவையை ஆரம்பித்துவிட்டார்.
தெருவில் ஆதரவின்றி திரிந்து கொண்டிருந்த 50 சிறார்களைத் தேர்ந்தெடுத்து அனைவரையும் ஆரம்ப பள்ளிகளில் சேர்த்து கல்விக் கண் திறக்கும் உயரிய முயற்சி அது.
அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள், கல்விக் கட்டணம், தங்குமிடம், சாப்பாடு என அனைத்தையும் லாரன்ஸ் அறக்கட்டளை மூலம் செய்து தரத் திட்டமிட்டிருக்கிறார் லாரன்ஸ்.
உதவும் உள்ளம் கொண்டவர்கள் ராகவா லாரன்ஸின் இணையதள, இ-மெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
www.larenccecharitabletrust.com
[email protected]
போன்: 9962243647, 9790750783


Click it and Unblock the Notifications











