நாய்க்குட்டி நிறுத்தம்; வருத்தத்தில் பிரசன்னா!

அஞ்சாதேவில் வில்லனாக வந்தாலும், ஹீரோவுக்கு நிகரான பெயரைத் தட்டிச் சென்றவர் பிரசன்னா.
ஆனால் அதற்குப் பிறகு சொல்லிக் கொள்கிற மாதிரி எந்தப்படமும் அவருக்கு அமையவில்லை. அட படம் வெளிவருவது இருக்கட்டும்... குறைந்தபட்சம் ஒப்பந்தமான படமாவது நிலைக்க வேண்டாமா...
அஞ்சாதேவுக்குப் பிறகு பிரசன்னா பெரும் நம்பிக்கையோடு நடிக்க ஒப்புக் கொண்ட படம் நாய்க்குட்டி.
அட என்னப்பா பேரு இது... நாய்க்குட்டி என்று சிலர் கேட்ட போது, மிக அருமையான கதை இது. பொருத்தமான தலைப்பும் கூட என்று ஆனந்தமாக நடிக்க ஆரம்பித்தார். இந்தப்படத்தில் ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறும் (எவ்வளவு வித்தியாசம்!!) பாத்திரமாம் பிரசன்னாவுக்கு.
ஆனால் நாய்க்குட்டி வளரத் தொடங்கியபோதே, படத்தின் தயாரிப்பாளர் விஏ துரைக்கும், இயக்குநர் ஜோவுக்கும் பிரச்சினையும் வளரத் துவங்கிவிட்டதாம். கதை வேறு வெளியே லீக் ஆகிவிட்டதாம் (?!).
இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் இயக்குநர்களின் உதவியாளர்களோடு சண்டை போட்டதெல்லாம் நடந்துள்ளது.
இப்போது பண ரீதியாகவும் சிக்கல் வரவே, 'இந்தப் படமே வேணாஞ்சாமி' என தயாரிப்பாளர் ஒதுங்கிக் கொள்ள, சீமான் வீட்டு 'நாய்க்குட்டி'யாக வளர்ந்த படம், தெருநாய்க் குட்டியாக அம்போவென நிற்கிறது!
யாராவது எடுத்து வளர்க்க முன்வந்தால் தேவலை..!


Click it and Unblock the Notifications











