அறிமுகம்- 'குத்து' பாய்ஸ்!

By Staff

Hrithik Roshan with wife Suzanne
வளைந்து நெளிந்து வசீகரமாக அழகிகள் குத்துப் பாட்டுக்களுக்கு ஆடி வரும் நிலையில் பாலிவுட்டில் குத்திப் பாட்டுக்களுக்கு நடிகர்கள் ஆடும் புதிய குத்து வரிசை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவது என்பது அந்தக் காலத்துப் படங்களிலேயே இருந்த விஷயம்தான். பாகவதர், சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் காலத்தில் புகழ் பெற்ற நடனமணிகள் இடம் பெறும் ஒரு பாடல் காட்சி இடம் பெறுவது வாடிக்கையாக இருந்தது.

ஆனால் இப்போது உள்ளது போல சிங்கிள் பீஸ், டபுள் பீஸ் என்று இல்லாமல் 18 கெஜ புடவையுடன் ஆடிப் பாடுவார்கள் அக்காலத்தில். ஆனால் இன்றைய குத்துவரிசையின் ரேஞ்சே வேறு.

ஆனால் பாலிவுட்டில் அடுத்த கட்டத்திற்குப் பாய்ந்து விட்டனர். அழகிய நடிகைகளின் குத்து வரிசைப் பாடல்கள் காலம் போய் இப்போது அழகிய நடிகர்களின் குத்தாட்டம் அங்கு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

எடுப்பான '6 பேக்' காட்டி, நடிகர்கள் ஆட ஆரம்பித்துள்ள ஐட்டம் பாட்டுகள் பாலிவுட் ரசிகைகளிடேயே பெரும் பரவசத்தை ஏற்படுத்தி வருகிறதாம். அதிலும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஆடும் ஐட்டம் பாட்டுக்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

கால், கிரேஸி 4 படங்கள் மூலம் ஹ்ரித்திக் ரோஷன் குத்தாட்ட நாயகர்களில் ஹாட் ஸ்டாராக உருவெடுத்திருக்கிறார். குறிப்பாக கிரேஸி 4 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் போட்டுள்ள ஆட்டம் செம பிக்கப் ஆகியுள்ளது.

இவரைத் தொடர்ந்து சல்மான் கானும் ஒரு பாட்டுக்கு ஹலோ படத்தில் ஆட்டம் போட்டுள்ளாராம். இந்த குத்தாட்ட ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தது ஷாருக் தான்.

இந்தப் புதிய டிரெண்ட் குறித்து திரைப்பட திறனாய்வாளர் தரன் ஆதர்ஷ் கூறுகையில், இது ஆரோக்கியமான போட்டி. பல புதிய விஷயங்களை திரையுலகில் இப்போது பரீட்சித்துப் பார்க்கின்றனர். அதில் இது ஒரு வகை.

குத்துப் பாட்டுக்களுக்கு பெண்கள் மட்டுமே ஆடி வந்த காலம் போய் அடுத்து ஆண்களும் அசத்த ஆரம்பித்துள்ளனர். நன்றாக இருந்தால் பார்த்து விட்டுப் போகட்டுமே என்கிறார் ஆதர்ஷ்.

ஷாருக்கான், ஹ்ரித்திக், சல்மானைத் தொடர்ந்து சண்டே படத்தில் துஷார் கபூரும், மிஸன் இஸ்தான்புல் படத்தில் அபிஷேக் பச்சனும், தீஸ்ரி மன்ஜில் 302 படத்தில் இர்பான் கானும் குத்துப் பாட்டுக்களுக்கு ஆட்டம் போட்டுள்ளனராம்.

சபாஷ் சரியான போட்டி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X