பொது மக்களுடன் அமர்ந்து ஹாரி பாட்டரை ரசித்த ரஜினி!

அவரது மகள் சௌந்தர்யா ரஜினியும் இந்தப் படத்தை தந்தையுடன் பார்த்து ரசித்தார்.
சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடந்த சிறப்புக் காட்சிக்கு பிரதான விருந்தினராக ரஜினியை அழைத்திருந்தார்கள். ஆனால் அவருடன் பொதுமக்களும் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் பொதுவாக இம்மாதிரி சிறப்புக் காட்சிகளைத் தவிர்க்கும் ரஜினி, எப்போதும் தனியாகவே போர் பிரேம்ஸில் படம் பார்ப்பார்.
ஆனால் நேற்று விஷயத்தை அவரிடம் கூறியவுடன், படத்துக்கு தன் மகள் சௌந்தர்யாவுடன் வருவதாகக் கூறிய ரஜினி, கண்டிப்பாக பொதுமக்களையும் படம் பார்க்க அனுமதியுங்கள் என்று சத்யம் நிர்வாகிகளிடம் கூறிவிட்டாராம்.
மாலை 6 மணிக்கு படம் பார்க்க வந்த ரஜினிக்கும் சௌந்தர்யாவுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது திரையரங்க நிர்வாகம்.
இந்தப் படத்தை தான் மிகவும் ரசித்துப் பார்த்ததாக பின்னர் தெரிவித்தார் ரஜினி.
மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி இப்போது ஒரு 3 டி அனிமேஷன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











