மலையாளத்தில் சரத்குமார் படு பிசி: குவியும் வாய்ப்புகள்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் சரத்குமாருக்கு தமிழில் இப்போது 'சஹாரா' ரேஞ்சுக்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், கேரளத்தில் வாய்ப்புகள் 'சிரபுஞ்சி' போல கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறதாம்.
அவர் நடித்த பழசிராஜா படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது. அத்தோடு சரத்குமாரின் நடிப்பும் பாராட்டுக்களை அள்ளியது. இதன் விளைவாக இப்போது அவருக்கு மலையாள படவாய்ப்புகள் வந்து குவிகின்றன. அவர் ஏற்கனவே 3 படங்களில் நடித்து வந்தார். தற்போது இன்னும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
தமிழகத்தில் 'நாட்டாமை'யாக சுற்றி வந்த சரத்குமார் இப்போது 'சேட்டனாக' மாறி மலையாளத்தை கலக்க ஆரம்பித்துள்ளார்.
More from Filmibeat
actor sarath kumar நடிகர் சரத்குமார் படங்கள் பழசி ராஜா மலையாள திரையுலகம் வாய்ப்புகள் chances films mollywood pazhassi raja


Click it and Unblock the Notifications











