twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாளத்தில் சரத்குமார் படு பிசி: குவியும் வாய்ப்புகள்!

    By Siva
    |

    Mamooty and Sarath Kumar
    நம்ம ஊரு 'நாட்டாமை' சரத்குமார் இப்போது மலையாளத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். பழசி ராஜா படத்தில் நடித்ததால் கிடைத்த பெயரைத் தொடர்ந்து இப்போது சரத்குமாரை மலையாளத்தில் விரும்பி அழைக்கிறார்களாம்.

    தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் சரத்குமாருக்கு தமிழில் இப்போது 'சஹாரா' ரேஞ்சுக்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், கேரளத்தில் வாய்ப்புகள் 'சிரபுஞ்சி' போல கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறதாம்.

    அவர் நடித்த பழசிராஜா படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது. அத்தோடு சரத்குமாரின் நடிப்பும் பாராட்டுக்களை அள்ளியது. இதன் விளைவாக இப்போது அவருக்கு மலையாள படவாய்ப்புகள் வந்து குவிகின்றன. அவர் ஏற்கனவே 3 படங்களில் நடித்து வந்தார். தற்போது இன்னும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.

    தமிழகத்தில் 'நாட்டாமை'யாக சுற்றி வந்த சரத்குமார் இப்போது 'சேட்டனாக' மாறி மலையாளத்தை கலக்க ஆரம்பித்துள்ளார்.

    English summary
    Actor Sarath Kumar seems busy in Malayalam. After Pazhassi Raja, he is getting a lot of chances to act there. He has already finished 3 movies and another chance is at his doorsteps.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X