twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலேசியாவில் எம்ஜிஆர் சிலை: திறந்து வைக்கிறார் சத்யராஜ்!

    By Shankar
    |

    Sathyaraj
    சென்னை: மலேசியாவில் நிறுவப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்ஜிஆரின் உருவச்சிலையை நடிகர் சத்யராஜ் வரும் ஜூன் 25-ம் தேதி திறந்து வைக்கிறார்.

    ஐந்தரை அடி உயர வெண்கலச் சிலை இது. கும்பகோணத்தில் உருவாக்கப்பட்டது. சரவணன் ஸ்தபதி, கணேஷ் ஸ்தபதி ஆகியோர் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளனர்.

    மலேசியாவின் பேரக் மாநிலம் உலுசபெத்தாங் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படுகிறது. மலேசிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவரும் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கோ சூ கூன் தலைமை வகிக்கிறார்.

    இந்த விழாவில் எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்படக் கண்காட்சியும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. கண்காட்சியில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய அரிய பொருள்கள் இடம்பெறுகின்றன.

    மலேசியாவில் கோலாலம்பூரில் இந்தியாவைச் சேர்ந்த விவேகானந்தருக்கு மட்டுமே சிலை இருக்கிறது. இவரையடுத்து, இந்தியத் தலைவர் ஒருவருக்கு மலேசியாவில் சிலை நிறுவப்படும் பெருமை எம்.ஜி.ஆருக்குக் கிடைத்துள்ளது.

    ஜூன் 25 ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தச் சிலை திறப்பு விழாவில் திரைப்பட நடிகர்கள் மயில்சாமி, வின்சென்ட் அசோகன், எம்.ஜி.ஆர். நற்பணி அமைப்பின் தலைவர் தாமோதரன் ஆகியோருடன் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பங்கேற்கிறார்கள்.

    English summary
    Legendary political leader and former CM of Tamil Nadu Dr MGR's bronze statue will be unveiled in Malaysia on June 25th by actor Satyaraj.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X