ஜவுளிக்கடை விளம்பரத்தில் சத்யராஜ்!

நடிக்க வந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நடிகர் சத்யராஜ் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்த விளம்பரத்தில் சத்யராஜ் மன்னராகவும், நடிகை சீதா அவரது 'மகாராணி'யாகவும், எம்எஸ் பாஸ்கர் அமைச்சராகவும் நடிக்கிறார்கள்.
சத்யராஜ் ஆரம்பத்தில் சின்னச்சின்ன வேடங்களில்தான் தோன்றி வந்தார். மிஸ்டர் பாரத் படத்தில் அவருக்கு குணச்சித்திர வேடம். பிறகு வில்லனாக ப்ரமோஷன். சாவி படம் மூலம் ஹீரோவானார்.
அதன்பிறகு தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்தார்.
இப்போது தனது வயது மற்றும் திரையுலக ட்ரெண்டை மனதில் கொண்டு தனது போக்கையும் மாற்றிக் கொண்டுள்ளார்.
இனி தொடர்ந்து நல்ல குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ள சத்யராஜ் 3 படங்களில் அத்தகைய வேடங்களில் நடிக்கிறார். தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் திரைப்படம் அதில் ஒன்று.
தெலுங்கில் மீண்டும் வில்லனாக ஒரு படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடிக்கிறார் (ஆனால் சிவாஜியில் வில்லன் வேடம் கிடைத்த போது நடிக்க மறுத்துவிட்டார்).
ஆனால் இதுவரை அவர் ஒரு மலையாளப்படத்தில் கூட நடிக்காமல் இருந்துவந்தார். பல நிறுவனங்கள் அழைத்தும் மறுத்து வந்த சத்யராஜ், இப்போது அதற்கும் ஓகே சொல்லிவிட்டார்.
முதல்முறையாக, அவர் ஒரு ஜவுளிக்கடை விளம்பரப் படத்தில் நடிக்கிறார். சும்மா இல்லை... ஒரு திரைப்படத்துக்கு நிகரான சம்பளத்துடன்தான் இந்த வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.
'அட, இது கூட நல்ல ரூட்டாயிருக்கே', என்று சந்தோஷப்பட்ட சத்யராஜ், இனி தொடர்ந்து விளம்பரப் படங்களில் நடிக்கப் போகிறாராம்.


Click it and Unblock the Notifications











