தமிழ் சினிமாவில் நடிக்கவே எனக்கு விருப்பம்- சுமன்

By Staff

Suman
தெலுங்கு மற்றும் பிற மொழிப் படங்களில் நடிப்பதைவிட தமிழில் நடிப்பதையே விரும்புகிறேன். என்னை மிக கவுரவமாக நடத்துவதிலும், திறமையை மதிப்பதிலும் தமிழ் இயக்குநர்களுக்கு தனி இடம் உண்டு என்கிறார் சுமன்.

சென்னை அருகே நடந்த ஒரு ஆன்மீக விழாவுக்கு வந்திருந்தார் சுமன்.

விழா முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் மீண்டும் எனக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினி. அவரை என் வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாது. ஆரம்ப காலத்திலிருந்தே என் மீது அவருக்கு தனி அன்பு. என்னுடைய குரு அவர் என்றாலும் மிகையில்லை. அவரால்தான் நான் மீண்டும் நல்ல மனிதனானேன்.

இனி என் கேரியரின் மிச்ச நாள்களை தமிழ் நடிகராகவே கழிக்க விரும்புகிறேன். தமிழில் கிடைக்கும் மரியாதை, வேறு எங்கும் இல்லை. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

தெலுங்கானா வேண்டும்!

ஆந்திர மக்களை நேசிப்பவன் என்ற முறையில் நான் தெலுங்கானாவை ஆதரிக்கிறேன்.

ஆந்திர மாநிலம் என்று இருந்தாலும் தெலுங்கானா, ஆந்திரா, ராயலசீமா என்று 3 பிரிவாகத்தான் அழைக்கப்பட்டு, இயங்கி வருகிறது. இதில் ஒரு பகுதி மக்கள் தெலுங்கானாவை விரும்பும்போது தனித் தெலுங்கானா என்று பிரித்துத் தருவதில் என்ன தவறு...

மக்களுக்காகத்தானே எல்லாமே. எனவே நான் தனி தெலுங்கானாவை ஆதரிக்கிறேன்.

ஆந்திராவில் நல கொண்டா என்று ஒரு கிராமம் உள்ளது. இங்கு கெமிக்கல் கலந்த குடிநீரே உள்ளதால் இங்கு பிறக்கும் குழந்தைகள் உடல் ஊனமுடனேயே பிறக்கின்றனர். 53 வருடமாகியும், இந்த கிராமத்தின் குறையை எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தும் தீர்க்க வில்லை.

இதை போன்ற பிரச்சினைகள் தீர்க்கத்தான் தனி தெலுங்கானா கேட்கிறார்கள்" என்றார் சுமன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X