ரஜினி வழியில் விஜய்!

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க, நிதின்சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் பந்தயம். இப்படத்தில் விஜய்யின் பரம விசிறி வேடத்தில் நடித்துள்ளாராம் நிதின் சத்யா. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.
இப்படத்தில் விஜய்யும் விஜய்யாகவே ஒரு காட்சியில் தோன்றுகிறார். எம்.ஜி.ஆர். என்று பெயரிடப்பட்ட படத்தில், பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
எம்.ஜி.ஆர். பட ஷூட்டிங்கின்போது விஜய்யை செட்டில் நிதின் சத்யா சந்திப்பது போல காட்சி வருகிறதாம்.
இப்படி தனதுதந்தையின் படத்தில் கெஸ்ட் ரோலில் வருவது விஜய்க்குப் புதிதல்ல. ஏற்கனவே சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்படத்தின் நாயகன் ரவிகிருஷ்ணா.
Comments


Click it and Unblock the Notifications