விஜய், சூர்யா, மாதவன்!

குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக அரசு ஒரு டாக்குமென்டரிப் படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது. அதில்தான் விஜய், சூர்யா, மாதவன் இணைந்து நடிக்கவுள்ளனர்.
மூன்று பேருக்குமே சிறார் வட்டாரத்தில் நல்ல மவுசு உண்டு. எனவேதான் இவர்களை வைத்து டாக்குமென்டரிப் படத்தை தயாரிக்க அரசு திட்டமிட்டது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக மூன்று பேரும் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கப் போவதில்லையாம்.
இயக்குநர் - ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், இந்தப் படத்தை இயக்கவுள்ளார். தற்போது அயன் படத்தை பிசியாக இயக்கி வருகிறார் ஆனந்த். அதற்கு மத்தியில் இந்த விழிப்புணர்வுப் படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஆனந்த்.
படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும், கோடை விடுமுறையில் இந்த டாக்குமென்டரி திரையிடப்படும் எனவும் தெரிகிறது.
அனைத்து தியேட்டர்கள், தமிழ் தொலைக்காட்சிகளில் இதைத் திரையிட அரசு தீர்மானித்துள்ளது.


Click it and Unblock the Notifications











