எம்.ஜி.ஆர். போல் நடனம் ஆட மறுத்தேன் - விஜய்காந்த்

விஜய்காந்த் நடித்துள்ள மரியாதை திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:
விக்ரமன் டைரக்ஷனில் நான் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் அனுபவித்து நடித்தேன்.
டைரக்டர் விக்ரமனும் எம்.ஜி.ஆர். ரசிகர். நானும் எம்.ஜி.ஆர். ரசிகர். எம்.ஜி.ஆர். நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலைத்தான் இந்த படத்தில் வைப்பதாக இருந்தோம். அதற்கு உரிமை கிடைக்கவில்லை. அதனால், இதயக்கனியில் இடம் பெறும் 'இன்பமே...' என்ற பாடலை வைத்துள்ளோம்.
இந்தப் பாடலுக்கு நான் எம்.ஜி.ஆர். போல் கைகளை கட்டிக்கொண்டு ஆடமாட்டேன் என்று முதலிலேயே கூறி விட்டேன். அவரை கிண்டல் செய்வது போல் அமைந்துவிடக் கூடாது என்பதால்தான் அப்படிச் சொன்னேன்.
பொதுவாக நான் சினிமா விழாவில் அரசியல் பேசுவதில்லை. பல சினிமா பட விழாக்களுக்கு என்னை அழைப்பார்கள். நம்மால் மற்றவர்களுக்கு பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதால், கலந்து கொள்வதில்லை.
'மரியாதை' நான் நடித்த படம் என்பதால், என் கட்சி தொண்டர்களை வரவழைத்தேன். அடுத்த மாதம் 10-ந் தேதி படம் வெளிவந்துவிடும்,' என்றார் விஜய்காந்த்.


Click it and Unblock the Notifications











