ஆமிர்கானா? யாருப்பா அது??

தனது 3 இடியட்ஸ் படத்தை புரமோட் செய்வதற்காக வெவ்வேறு விதமான கெட்டப்களில் நாடு முழுக்க ரவுண்டு அடிக்க ஆரம்பித்துள்ளார் ஆமிர்கான். இது சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் தனது ரவுண்டுகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் ஆமிர்கான். அதன் ஒரு கட்டமாக மாறு வேடத்தில் அவர் மகாபலிபுரம் வந்தார்.
அங்குள்ள ஒரு கைடைப் பிடித்துக் கொண்டு அவர் உதவியுடன் தொல்பொருள் பெருமை மிக்க தலங்களைப் பார்த்து மகிழ்ந்தார்.
சிறிது நேரம் போன பின்னர் தான் யார் என்பதை அந்த கைடிடம் சொல்லி விடலாமே என்ற நல்லெண்ணத்தில், ஐயா, நான்தான் ஆமிர்கான் என்று கூறியுள்ளார்.
அதைக் கேட்ட கைடுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்து விட்டுப் போங்கள், அதனால் என்ன என்ற ரீதியில் அவர் நெகட்டிவாக பதிலளிக்க தடுமாறி விட்டார் ஆமிர்.
நான் ஒரு நடிகரப்பா என்று அடுத்த விளக்கத்திற்குப் போனார். அப்படியா, அப்படி எனக்கு யாரையுமே தெரியாதே என்று கைடு தெளிவாக குழப்ப, தெள்ளத் தெளிவாக குழம்பி விட்டார் ஆமிர்.
நாம் யாரென்று தெரியவில்லை போலும், ஒரு வேளை ஷாருக் கானை தெரிந்திருக்கலாமோ என்ற நப்பாசையில், உங்களுக்கு ஷாருக் கானை தெரியுமா என்று கேட்டார்.
இல்லையே என்று மறுபடியும் குழப்பினார் அந்த கைடு. சர்தான் என்று டயர்ட் ஆகிப் போன ஆமிர், சரி இந்திப் படம் பார்க்கும் பழக்கம் உண்டா, கடைசியாப் பார்த்த படம் எது என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த கைடு, நான் கடைசியாப் பார்த்த படம் ஷாலி்மார். எனக்கு தர்மேந்திராவையும், அமிதாப் பச்சனையும் நல்லாத் தெரியுமே என்று டகாய்ச்சியாக பதிலளிக்க, ரொம்ம்பபப லேட்டஸ்டா இருக்காரே பார்ட்டி என்று புலம்பியபடி இடத்தைக் காலி செய்தாராம் ஆமிர்.
முன்னதாக ஹிமாச்சல், மேற்கு வங்கம் என பல இடங்களி்லும் மாறுவேடத்தில் திரிந்த அமீரை யாராலும் அடையாளம் காண முடியவில்லையாம்.
கொல்கத்தாவில் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வீ்ட்டு வாசலில் இவர் போய் நிற்க கூர்கா அடிக்காத குறையாக விரட்டியுள்ளார். பிறகு தான் யார் என்பதை சொல்லவே கங்குலி ஓடி வந்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று விருந்து வைத்து அனுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











