நான் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன்-நடிகர் பிரபு

நெல்லையில் பிரபல நகை கடை திறப்பு விழா நடந்தது. அதில் பிரபு கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நெல்லை வீரம் விளைந்த மண், நெல்லை மாவட்டம் என்றால் நினைவுக்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், வஉசிதம்பரனார். மேலும் இவர்களை போல் திரைப்படங்களில் நடித்த என்னுடைய தந்தையின் ஞாபகம் வருகிறது.
நெல்லையில் நண்பர்கள், தந்தையின் அபிமானிகள் அதிகம் உள்ளனர். எனவே நெல்லை மாவட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு அதிகமான தொண்டர்கள் இங்குள்ளனர்.
அனைத்து கட்சியிலும் நண்பர்கள் உள்ளனர். நான் அரசியல் கட்சிகளுக்கு அப்பற்பட்டவன்.
சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் மீண்டும் படம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார் பிரபு.
Comments
actor prabhu actor prabhu in nellai அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன் என்று பிரபு பேட்டி நடிகர் பிரபு நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி


Click it and Unblock the Notifications