அஜீத்தின் ஏகன் சூட்டிங் ஓவர்!

By Staff

Ajith
ஷூட்டிங்குக்காக ஏலகிரிக்குப் போயிருந்த ஏகன் படக் குழுவினர் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளனர்.

ராஜு சுந்தரத்தின் முதல் இயக்கத்தில், அஜீத் நடிப்பில் உருவாகிறது ஏகன். வித்தியாசமான கெட்டப்பில் அஜீத் இப்படத்தில் நடிக்கிறார்.

அய்ங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம், இந்தியில் வெளியான மெய்ன் ஹூன் நா படத்தின் ரீமேக் ஆகும். செப்டம்பரில் உலகம் முழுக்க திரையிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங்குக்காக ஏலகிரி மலைக்குப் போயிருந்தது படக்குழு. வேலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைப் பிரதேசமான ஏலகிரியில் வைத்து சில முக்கிய காட்சிகளையும், நயன்தாரவுடன் அஜீத் ஆடிப் பாடும் ஒரு பாடல் காட்சியையும் சுட்டுள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடவடைந்து விட்டது. விரைவில் பின்னணி இசைப் பதிவு நடைபெறவுள்ளதாம்.

ஏகனை முடித்து விட்டு சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் அஜீத் நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X