twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது அஜீத் மன்றத்தினரின் கலாட்டா!

    By Staff
    |

    Ajith
    எல்லை மீறிப் போய்க்கொண்டிருப்பதாக மக்கள் கடுப்புடன் திட்டும் அளவுக்கு முற்றிப் போயுள்ளது, அஜீத் ரசிகர் மன்றத்தினரின் அலம்பல்.

    அசல் திருவிழா என்ற பெயரில் 100 அஜீத் ரசிகர் மன்றங்களைத் திறக்கப் போவதாக மதுரை ரசிகர்கள் அறிவித்ததும், 'இது காசு பார்க்கும் கும்பலின் மோசடி வேலை' என்று அஜீத்தின் தலைமை மன்ற நிர்வாகி அறிக்கை விட்டதும் நினைவிருக்கும்.

    இந்த அறிக்கை வெளியான சில தினங்களில், 'நான் திட்டற மாதிரி ஆக்ட் பண்றேன்... நீ அழற மாதிரி நடி' என்று அஜீத் தலைமை மன்றமும், விழா நடத்துவதாக அறிவித்த மதுரை ரசிகர்களும் சமாதானமாகி விட்டார்களாம்.

    சண்டைக்கு பப்ளிசிட்டி தேடும் இவர்கள், சில பல பேரங்களுக்குப் பின் சமாதானமாகிவிட்டதை மட்டும் யாருக்கும் சொல்லவில்லை.

    கடைசியில் திட்டமிட்டபடி அஜீத் ரசிகர்கள் மதுரை அரசரடியில் அசல் திருவிழா நடத்தியிருக்கிறார்கள் நேற்று முன் தினம்.

    யூ.சி. பள்ளி மைதானத்தில் நடந்த இந்த விழாவில் அசல் திரைப்பட வினியோகஸ்தர் மற்றும் பிரபு ரசிகர் மன்ற தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    விருதுநகர், தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கார் வேன்களில் வந்தனர்.

    விழா மாலை 6 மணிக்கு தொடங்கியுள்ளது. அப்போது சிலர் கூச்சல் போட்டனர். நாற்காலிகளை தூக்கி வீசினர். இதில் சில நாற்காலிகள் உடைந்தன. வேன், ஆட்டோக்கள் கண்ணாடிகள் நொறுங்கினவாம். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விழா விரைவாக முடிக்கப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    அப்போது சிலர் அரசரடி ரோட்டில் சென்ற பஸ்கள் மீது கல் வீசி தாக்கினர். இதில் 2 பஸ்களில் கண்ணாடிகள் உடைந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X