சூர்யா ரூ. 5 கோடி-பரத் 2.5 கோடி!

By Staff

Prasanna with Sneha
தமிழ் சினிமாவில் கார்பரேட் நிறுவனங்களின் வருகையால் நடிகர்களின் சம்பளம் தாறுமாறாக ஏறி வருகிறது.

பிரமிட் சாய்மீரா, மிட்வேலி, ஐங்கரன், ரிலையன்ஸ், ராடன் டி.வி., ஆட்லேப்ஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்கள் தமிழ் பட தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் பல நிறுவனங்கள் தமிழ் சினிமாவுக்குள் காலடி வைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் அள்ளிக் கொடுக்க தயாராக இருப்பதால் தமிழ் பட உலகின் முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தை கிடுகிடுவென உயர்ந்துவிட்டனர்.

இதுவரை ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த அஜீத், பில்லா படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை ரூ.8 கோடியாக உயர்த்தி விட்டார். இப்போது ஐங்கரனுக்காக அவர் நடிக்கும் ஏகனில் இதுதான் சம்பளம்.

அடுத்ததாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரிக்கவுள்ள படத்திற்கும் அஜீத் இதே சம்பளத்தை வாங்கியுள்ளனர். ஏகன் நன்றாக ஓடினால் இந்தத் தொகை அதிகரிக்குமாம்.

அதே போல இதுவரை ரூ.3 கோடி வாங்கி வந்த சூர்யா, தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியிருக்கிறார்.

ஏவிஎம்மின் அயன் படத்தில் இவருக்கு ரூ. 4.5 கோடி சம்பளம் என்கிறார்கள். தனது பேரழகன் படத்தால் ஏவிஎம்முக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்காக ரூ.50 லட்சத்தை விட்டுக் கொடுத்துவிட்டார் போலிருக்கிறது.

ரூ.2 கோடி வாங்கி வந்த தனுஷ், பொல்லாதவன், யாரடி நீ மோகினிக்குப் பிறகு ரூ.4 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டார். விஜயா நிறுவனத்தின் புதிய படமான படிக்காதவனுக்கு மொத்த பட்ஜெட் எட்டு கோடி. இதில் தனுஷின் சம்பளம் 4 கோடி!

அட, 50 லிருந்து 90 லட்சம் வரை வாங்கிக் கொண்டிருந்த பரத்தின் சம்பளம் கூட பழனிக்குப் பிறகு ரூ.2.5 கோடியாகிவிட்டது.

ரூ.35 லட்சம் பெற்று வந்த பிரசன்னாவுக்கு இப்போது ரூ.1 கோடிவரை தர தயாராக இருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். இவரது அடுத்த படமான அச்சமுண்டு அச்சமுண்டு ஒரு கார்ப்பரேட் தயாரிப்புதான்.

படம் எதுவும் ஓடாவிட்டாலும் சிம்பு இன்னமும் ரூ.2 கோடியிலிருந்து இறங்கி வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.

இந் நிலையில் இன்னும் 6 கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாகவே தமிழ் படங்களைத் தயாரிக்க களமிறங்க தயாரிப்பாளர் சங்கத்தின் ஒத்துழைப்பை நாடியுள்ளன.

இந்த நிறுவனங்களும் வந்துவிட்டால், நடிகர்களுக்கு இன்னும் கொண்டாட்டம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X